search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமார் சங்ககரா"

    விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இந்திய அணிக்கான அற்புதமான கண்டுபிடிப்பு என்று இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககரா தெரிவித்துள்ளார். #RisshabhPant
    இந்திய அணியின் தலைசிறந்த வீரரான எம்எஸ் டோனி கடந்த 2004-ல் இருந்து சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். 37 வயதாகும் டோனி உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு எம்எஸ் டோனிக்கு மிகவும் சிறப்பானதாக இல்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து போட்டியிலும் அரைசதம் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

    டோனியின் ஆட்டத்திறன் குறைந்து வரும் நிலையில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் அவரது இடத்தை பிடிக்க தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் டோனி இருக்க வேண்டும், ரிஷப் பந்த் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு என இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககரா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து குமார் சங்ககரா கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு. இளம் வீரராக இருந்தாலும், அல்லது வயது மூத்த வீரராக இருந்தாலும் அவர்களது இடத்திற்காக போட்டியிடுவது சிறந்தது. அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதுதான் முக்கியது. அதை வாய்ப்பு அல்லது மிரட்டல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    உலகக்கோப்பை என்று வரும்போது அனுபவ வீரர்கள் அதிக அளவில் இருப்பார்கள். உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் டோனிக்கு கட்டாயம் இடமிருக்கும். இக்கட்டான நிலையில் விராட் கோலி டோனியுடன் அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட முடியும்’’ என்றார்.
    இந்திய அணி விராட் கோலியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயம் அல்ல. திறமையான வீரர்கள் உள்ளனர் என்று சங்ககரா தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. விராட் கோலி 200 ரன்கள் அடித்ததால் எட்ஜ்பாஸ்டனில் 31 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    ஆனால் லார்ட்ஸில் 23, 17 என நாற்பது ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. தொடக்க பேட்ஸ்மேன்கள் தவான், லோகேஷ் ராகுல், முரளி விஜய், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் புஜாரா, ரகானே, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் திணறி வருகிறார்கள்.

    இதனால் இந்தியா முழுக்க முழுக்க விராட் கோலியை நம்பியே இருக்கிறது. அவர் ஒன் மேன் ஆர்மியாக இருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், பேட்டிங்கில் ஜாம்பவான விளங்கியவரும் ஆன சங்ககரா, இந்திய அணி கோலியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக விராட் கோலியை பேட்டிங் செய்து வருவதை பார்க்கையில் அவருடன் மற்ற பேட்ஸ்மேன்களை ஒப்பிடுவது நியாயம் அல்ல. அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது நம்பமுடியாத வகையில் இருக்கும். சிறந்த பெர்மார்மர். ஆனால், மற்ற வீரர்கள் சிறந்தவர்களே.

    புஜாரா, ரகானே உண்மையிலேயே சிறந்த பேட்ஸ்மேன்க்ள. புஜாரா டெஸ்டில் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். ரகானே வெளிநாட்டில் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். மற்ற வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். பார்மில் இருக்கும்போது கேஎல் ராகுல் அபாயகரமானவர். முரளி விஜய், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் குறைந்தவர்கள் அல்ல’’ என்றார்.
    இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆன குமார் சங்ககரா, தனக்கு அரசியலில் ஈடுபடும் என்ற எண்ணமே இல்லை என்கிறார். #Sangakkara
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த இவர், தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இம்ரான் கான், தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

    தற்போது நடந்து முடிந்துள்ள பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடத்தில் வெற்றி பெற்றது. வருகிற 18-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் இம்ரான் கான் வழியில் இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன சங்ககரா அரசியலில் களம் இறங்க இருக்கிறார் என்ற செய்தி வந்தது.



    இந்நிலையில் அப்படி என்ற எண்ணமே இல்லை என்று சங்ககரா தெளிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘என்னைப் பற்றி வரும் யூகம் மற்றும் வதந்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்க விரும்புகிறேன். அரசியலில் ஈடுபடும் எந்த எண்ணமும் எனக்கில்லை.

    நான் அரசியலில் இல்லை. இது உறுதி. நான் எப்போதும் இல்லை என்பதை என்னால் சொல்ல முடியும்’’ என்றார்.
    ×